விளையாட்டு வீரர்களுக்கு ரூ.78.50 லட்சம் ஊக்கத் தொகை

விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்/வீராங்கனைகளுக்கு ரூ.78.50 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
ஊக்கத் தொகை பெற்ற வீரர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.
ஊக்கத் தொகை பெற்ற வீரர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.

விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்/வீராங்கனைகளுக்கு ரூ.78.50 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
விழாவில் நிதியுதவியை வழங்கி, அவர் பேசியதாவது:
தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை அளித்தல், உயரிய பயிற்சி கொடுத்தல், விளையாட்டு மையங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அவரது வழியில் தமிழக அரசு செயல்படுகிறது. இதை வீரர்கள் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.சரோஜா, க.பாண்டியராஜன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நிதியுதவி பெற்றவர்கள் விவரம்:-
*2014-ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற 17-வது ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களின் பயிற்றுநர்களான சங்கர் பாசுவுக்கு ரூ.7.50 லட்சமும், சைரஸ் போன்ச்சாவுக்கு ரூ.24 லட்சம், டி.ராமச்சந்திரனுக்கு ரூ.3 லட்சம்
*சர்வதேச சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டம் (2012-ஆம் ஆண்டு) வென்ற எம்.ஆர்.வெங்கடேஷுக்கு ரூ.5 லட்சம், வி.ஏ.வி.ராஜேஷுக்கு (2013-ஆம் ஆண்டு) ரூ.3 லட்சம், அரவிந்த் சிதம்பரத்துக்கு (2015-ஆம் ஆண்டு) ரூ.5 லட்சம்.
*சர்வதேச மகளிர் சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற மிச்செல் காத்தெரினா, எம்.மகாலட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம்
*2014-ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதலில் வெள்ளி வென்ற கே.சாந்த முத்துவேலுக்கு ரூ.15 லட்சமும், ஜுடோ பெண்கள் குழுப் போட்டியில் வெண்கலம் வென்ற விஜயசாந்திக்கு ரூ.10 லட்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com