தேசிய மகளிர் ஹாக்கி: ஜார்க்கண்ட் சாம்பியன்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் ஜார்கண்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜார்கண்ட் அணிக்கு கோப்பையை வழங்கிய ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன் மற்றும் ஹாக்கி சங்க நிர்வாகிகள்.
ஜார்கண்ட் அணிக்கு கோப்பையை வழங்கிய ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன் மற்றும் ஹாக்கி சங்க நிர்வாகிகள்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் ஜார்கண்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேலுமாணிக்கம் செயற்கைப்புல் ஹாக்கி மைதானத்தில் 7-ஆவது தேசிய அளவிலான சப்-ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டி கடந்த 3-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் "ஏ' பிரிவில் 40 அணிகள், "பி' பிரிவில் 40 அணிகள் என மொத்தம் 80 அணிகள் பங்கேற்றன. "பி' பிரிவில் ஹிமாசலப் பிரதேச அணி முதலிடத்தையும், போபால் அணி 2-ஆவது இடத்தையும் பெற்றன.
"ஏ' பிரிவு இறுதிப் போட்டியில் ஜார்க்கண்ட் அணியும், ஹரியாணா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் ஜார்க்கண்ட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. ஹரியாணா அணிக்கு 2-ஆவது இடமும், உத்தரப் பிரதேச அணி 3-ஆவது இடத்தையும் பிடித்தன.
பரிசளிப்பு: பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். சாம்பியன் பட்டம் வென்ற ஜார்க்கண்ட் அணிக்கு ஆட்சியர் எஸ்.நடராஜனும், 2-ஆவது இடம் பெற்ற ஹரியாணா அணிக்கு மருத்துவர் டி.அரவிந்தராஜும், 3-ஆவது இடம் பெற்ற உத்தரப்பிரதேச அணிக்கு வி.மனோகரனும் கோப்பையை வழங்கினர்.
சிறந்த வீராங்கனையாக ஜார்க்கண்டின் சஞ்சிதா குமாரியும், சிறந்த கோல் கீப்பராக ஜார்க்கண்டின் கல்யாணி கிந்தோவும், சிறந்த தடுப்பாட்டக்காரராக ஹரியாணாவின் பிரீத்தியும், சிறந்த நடுகள ஆட்டக்காரராக ஜார்க்கண்டை சேர்ந்த பியூட்டி டங்டங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com