தோனி, பி.வி.சிந்துவுக்கு பத்ம விருதுகள்

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைப் படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
இந்த விருதுகளுக்கு விளையாட்டுத் துறை சார்பில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, சிந்துவின் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆகியோரின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
இந்நிலையில், மேற்குறிப்பிட்டோரின் பெயர்களுக்கு பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, வரும் குடியரசு தினத்தன்று தோனி, சிந்து, கோபிசந்த் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர்களுக்கு எந்த வகையான பத்ம விருதுகள் வழங்கப்படும் என்பது தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com