செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

*மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா.
*பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்ஃப்ராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
*ஐ- லீக் மற்றும் ஃபெடரேஷன் கோப்பை உள்ளிட்ட கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் பெங்களூரு எஃப்சி அணியில் இருந்து விலகுவதாக அதன் நட்சத்திர வீரர் சி.கே.வினீத் அறிவித்துள்ளார்.
*ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் எதிர்காலம் குறித்து வரும் 24- ஆம் தேதி நடைபெறும் ஹாக்கி இந்தியா ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தில் 1009 ரன்கள் விளாசி சாதனை புரிந்த பிரணவ் தனவாடேவுக்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு உதவித் தொகை ரூ.10,000- ஐ தொடர்ந்து வழங்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com