தோல்வியிலிருந்து மீண்டு தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?: மேற்கிந்தியத் தீவுகளுடன் இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்

இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5- ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தோல்வியிலிருந்து மீண்டு தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?: மேற்கிந்தியத் தீவுகளுடன் இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்

இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5- ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் இதுவரை இந்தியா 2 வெற்றிகளையும், மேற்கிந்தியத் தீவுகள் ஒரு வெற்றியையும் பதிவு செய்துள்ளன. இதன் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி தொடரை வெல்லும் நோக்கில் களமிறங்க, மேற்கிந்தியத் தீவுகளோ தொடரை சமன் செய்யும் முனைப்பில் களம் காண உள்ளது.
இந்திய அணியைப் பொருத்த வரையில் முந்தைய ஆட்டத்தில் மோசமாக தோல்வி கண்டது. இந்திய பந்துவீச்சாளர்கள் குறைவான ஸ்கோருக்குள்ளேயே (189) மேற்கிந்தியத் தீவுகளை கட்டுப்படுத்தினாலும், அந்த ஸ்கோரை கூட எட்டுவதற்கு உதவ முடியாமல் அணியின் தோல்விக்கு அடித்தளமிட்டனர் இந்திய பேட்ஸ்மேன்கள்.
எனவே, முந்தைய தோல்வியில் இருந்து மீண்டு வரும் முனைப்புடன் இந்திய அணி இந்த ஆட்டத்தில் களம் காணும். பேட்ஸ்மேன்கள் அனைவரும், விமர்சனங்களுக்கு பேட்டிங்கில் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். டாப் ஆர்டரில் வழக்கம் போல ஷிகர் தவன்- அஜிங்க்ய ரஹானே ஜோடி அருமையான தொடக்கத்தை தரவுள்ளது. அதைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, தினேஷ் கார்த்திக், தோனி உள்ளிட்டோர் உள்ளனர்.
அதேபோல், காயம் காரணமாக முந்தைய ஆட்டத்தில் பங்கேற்காத யுவராஜ், இந்த ஆட்டத்தில் திரும்பவுள்ளதாகத் தெரிகிறது. இவர்களுடன் கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்திய அணியின் பந்துவீச்சைப் பொருத்த வரையில், முந்தைய ஆட்டத்தில் வெளிப்படுத்திய அதே திறனை வெளிப்படுத்தும் முனைப்புடன் வருகின்றனர். உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டியா உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் இந்த ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்படுவர் என்று எதிர்பார்க்கலாம்.
மறுபுறம், மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொருத்த வரையில் முந்தைய ஆட்டத்தில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. அதே வியூகத்துடன் அவர்கள் களம் கண்டு, வெற்றி பெற்று, தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com