கொழும்பு டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி!

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
கொழும்பு டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி!

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் இலங்கை அணி வெற்றிபெற 218 ரன்கள் எடுக்க வேண்டியுள்ள நிலையில் கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. இந்நிலையில், 114.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது.

கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 94.4 ஓவர்களில் 356 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் இர்வின் 160 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 102.3 ஓவர்களில் 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் உபுல் தரங்கா 71, தினேஷ் சன்டிமல் 55 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் கிரெமர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராஸா 160 பந்துகளில் அரை சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது. இதன்பிறகு வாலர் 68 ரன்களில் ஆட்டமிழக்க, சிக்கந்தர் ராஸா 205 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் கேப்டன் கிரெமர் 48 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 107.1 ஓவர்களில் 377 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது ஜிம்பாப்வே. இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

388 ரன்கள் இலக்கு: இதையடுத்து 388 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள்எடுத்தது. குஷல் மென்டிஸ் 60, மேத்யூஸ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் இலங்கை அணி வெற்றிபெற 218 ரன்கள் எடுக்க வேண்டியுள்ள நிலையில் கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணியால் வெற்றிபெற முடிந்தது. இலங்கையின் டிக்வெல்லா 81 ரன்கள் எடுத்தார். குணரத்னே 80 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இலங்கை அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.  114.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது. இது, இலக்கைத் துரத்திய போட்டிகளில் ஓர் அணி பெற்ற 5-வது பெரிய வெற்றியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com