ஏடிபி தரவரிசை: ஃபெடரர் முன்னேற்றம்

ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இரு இடங்கள் முன்னேறி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இரு இடங்கள் முன்னேறி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 8-ஆவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார் ஃபெடரர்.
பிரிட்டனின் ஆன்டி முர்ரே முதலிடத்தையும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2-ஆவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டனர். விம்பிள்டனில் முர்ரே காலிறுதியோடும், நடால் 4-ஆவது சுற்றோடும் வெளியேறினர். எனினும் அவர்களின் தரவரிசையில் எந்த பின்னடைவும் இல்லை.
செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-ஆவது இடத்திலும், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 5-ஆவது இடத்திலும், விம்பிள்டனில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய குரோஷியாவின் மரின் சிலிச் 6-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ராம்குமார் முன்னேற்றம்: இந்திய வீரர் ராம்குமார் 16 இடங்கள் முன்னேறி 168-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும். இந்திய வீரர்கள் யூகி பாம்ப்ரி 212-ஆவது இடத்திலும், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 214-ஆவது இடத்திலும், ஸ்ரீராம் பாலாஜி 293-ஆவது இடத்திலும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com