மகளிர் ஐபிஎல்: மிதாலி ராஜ் ஆர்வம்!

இதுபோன்ற லீக் போட்டிகளில் அதிகமாக விளையாடும்போது நல்ல அனுபவம் கிடைக்கும். திறமையும் மெருகேறும்...
மகளிர் ஐபிஎல்: மிதாலி ராஜ் ஆர்வம்!

மகளிருக்கான ஐபிஎல் போட்டியை உருவாக்கவேண்டும் என இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 4-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து. அதேநேரத்தில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி, 48.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.4.25 கோடியும், இரண்டாவது இடம்பிடித்த இந்திய அணிக்கு ரூ.2.12 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்தபிறகு இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறியதாவது: நிச்சயமாக அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் நான் விளையாட மாட்டேன். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிகளும் அனுபவங்களும் மகளிர் கிரிக்கெட்டைப் பலமடங்கு முன்னெடுத்துச் செல்லும். மக்களும் மகளிர் கிரிக்கெட்டில் தற்போது அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். பயிற்சி ஆட்டங்களில் நாங்கள் தோற்றபோது இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என யாரும் எண்ணவில்லை. அதேபோல தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராகத் தோற்கும்போதும் நாங்கள் இறுதிச்சுற்றில் விளையாடுவோம் என யாரும் எங்களுக்குச் சாதகமாக எண்ணவில்லை.

மகளிர் பிக் பாஷ் லீக்கில் விளையாடிய இந்திய வீராங்கனைகளுக்கு நல்ல பலன்களை அடைந்துள்ளார்கள். இதுபோன்ற லீக் போட்டிகளில் அதிகமாக விளையாடும்போது நல்ல அனுபவம் கிடைக்கும். திறமையும் மெருகேறும். எனவே மகளிர் ஐபிஎல் தொடங்க இதுவே சரியான நேரம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com