டிஎன்பிஎல்: காரைக்குடி அணி 158 ரன்கள் குவிப்பு

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த காரைக்குடி காளை அணியின் இன்னிங்ûஸ அனிருத்தா ஸ்ரீகாந்தும், விஜயகுமாரும் தொடங்கினர்.
இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 2-ஆவது ஓவரில் விஜய் குமார் ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து அனிருத்தாவுடன் இணைந்தார் கேப்டன் எஸ்.பத்ரிநாத்.
இந்த ஜோடி அசத்தலாக ஆட, காரைக்குடி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அந்த அணி 9.4 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்திருந்தபோது பத்ரிநாத் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு அனிருத்தாவுடன் இணைந்தார் ராஜாமணி. இந்த ஜோடியும் சிறப்பாக ஆட, 14-ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது காரைக்குடி அணி. அந்த அணி 107 ரன்களை எட்டியபோது ராஜாமணி ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த சாஷன் 9 ரன்களில் நடையைக் கட்ட, கணபதி களம்புகுந்தார்.
இதனிடையே மறுமுனையில் சிறப்பாக ஆடிய அனிருத்தா, முகமது பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 39 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். காரைக்குடி அணி 16.3 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்திருந்தபோது 5-ஆவது விக்கெட்டாக அனிருத்தா ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு வந்த ராஜ்குமார் ரன் ஏதுமின்றி வெளியேற, கணபதி 12 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது காரைக்குடி அணி. கோவை கிங்ஸ் தரப்பில் விக்னேஷ், முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கோவை}91/1
159 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த கோவை கிங்ஸ் அணியில் அனிருத் ஸ்ரீராம்-சூர்யபிரகாஷ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.1 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்தது. அனிருத் ஸ்ரீராம் 35 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சூர்யபிரகாஷுடன் இணைந்தார் ரஞ்சன் பால். அந்த அணி12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. சூர்யபிரகாஷ் 38, ரஞ்சன் பால் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com