ஐசிசி தரவரிசை 6-ஆவது இடத்தில் ஹர்மன்பிரீத் கெளர்

மகளிர் கிரிகெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கெளர் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறி 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிசி தரவரிசை 6-ஆவது இடத்தில் ஹர்மன்பிரீத் கெளர்

மகளிர் கிரிகெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கெளர் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறி 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நிறைவடைந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்ததன் மூலம் 7 இடங்கள் ஏற்றம் கண்டு அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார். தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ள 2-ஆவது இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் ஆவார்.
முன்னதாக, இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 2-ஆவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் முதலிடத்திலும், அதே அணியின் எலிஸ் பெர்ரி 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதனிடையே, உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 86 ரன்கள் எடுத்த இந்தியாவின் பூனம் ரெளத் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 14-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். மற்றொரு வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி 7 இடங்கள் ஏற்றம் கண்டு, தனது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 26-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில், ஒருநாள் போட்டியில் உலகில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனையான இந்தியாவின் ஜூலான் கோஸ்வாமி 4 இடங்கள் முன்னேறி, 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். மற்றொரு இந்தியரான சிக்ஷா பாண்டே, ஒரு இடம் முன்னேறி 12-ஆவது இடத்துக்கும், பூனம் யாதவ் 6 இடங்கள் ஏற்றம் கண்டு 28-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். இதில் பூனம் யாதவ் இந்த இடத்துக்கு வருவது இது முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com