செய்திகள் சில வரிகளில்...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு மகளிர் கிரிக்கெட்டுக்கு உரிய கெளரவம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

*உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு மகளிர் கிரிக்கெட்டுக்கு உரிய கெளரவம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
*இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மாவுக்கு, ஹிமாசல பிரதேச அரசு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவி வழங்கி கெளரவித்துள்ளது.
*நீச்சல் விளையாட்டுக்கு செய்த பங்களிப்பிற்காக, இந்திய நீச்சல் சம்மேளன தலைமை நிர்வாக அதிகாரி வீரேந்திர நானாவதி, புடாபெஸ்டில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின்போது கெளரவிக்கப்பட்டார்.
*ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் பட்டங்கள் வென்ற ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் மெர்வின் ரோஸ் (87) வயது மூப்பு காரணமாக காலமானார் என்று அந்நாட்டு டென்னிஸ் சங்கம்
அறிவித்துள்ளது.
*கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஹாக்கி இந்தியா லீக் போட்டி 2018-ஆம் ஆண்டு நடைபெறாது எனவும், புதிய பரிமாணத்துடன் 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் எனவும் ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
*உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் கேரள வீராங்கனை பி.யு.சித்ரா சேர்க்கப்படாததற்கு, அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com