பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் அனில் கும்ப்ளே?

பிசிசிஐயுடனான கும்ப்ளேவின் ஒப்பந்தம் ஜூன் 20 உடன் முடிவடைகிறது. ஆனால் அவருக்கு பொறுப்பு நீட்டிப்பு வழங்கப்படவில்லை...
பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் அனில் கும்ப்ளே?

சாம்பியன்ஸ் டிராபி போட்டி முடிவடைந்தபிறகு பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா செய்யவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிசிசிஐயுடனான கும்ப்ளேவின் ஒப்பந்தம் ஜூன் 20 உடன் முடிவடைகிறது. ஆனால் அவருக்கு பொறுப்பு நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ கடந்த வாரம் முதல் வரவேற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், பிசிசிஐ இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து கோலி - கும்ப்ளே இடையே மோதல் நிலவுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. 

இந்தச் சர்ச்சைகளை அடுத்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, இந்த சீசனில் உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 13 ஆட்டங்களில் 10 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. 2 ஆட்டங்கள் சமன் ஆகின. அதேபோல், மேற்கிந்தியத் தீவுகளிலும் ஒரு டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

இதுபோல கடந்த ஒருவருடத்தில் இந்திய அணி பல வெற்றிகளை அடைந்தபிறகும் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்காததாலும் கோலி தொடர்புடைய சர்ச்சைகளாலும் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடந்துவருவதால் தற்சமயம் அமைதி காக்கும் கும்ப்ளே, போட்டி முடிவடைந்த பிறகு தனது மெளனத்தைக் கலைப்பார் என்றும் அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com