அட! தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடவுள்ள சுரேஷ் ரெய்னா!

இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா விளையாடவுள்ளார்.
அட! தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடவுள்ள சுரேஷ் ரெய்னா!

இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா விளையாடவுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ரூபி காஞ்சி வாரியஸ் அணியின் பெயர் ரூபி திருச்சி வாரியர்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. 

இந்த வருட டிஎன்பிஎல் போட்டியில் பிரபல வீரர்கள் பலர் இடம்பெறவுள்ளார். கெளதம் கம்பீர் ஏதாவதொரு டிஎன்பிஎல் அணியின் ஆலோசகராகப் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தப் போட்டியினால் இளைஞர்கள் பலர் நல்ல வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். உள்ளூர் திறமைகளுக்கு மிகவும் உதவுகிறது. டிஎன்பிஎல் போட்டியில் விளையாடி ஒரு இளைஞரின் வாய்ப்பைப் பறிக்க விரும்பவில்லை. ஆலோசகராகப் பணியாற்ற அணிகளிடம் பேசிவருகிறேன் என்று கூறியுள்ளார். டிஎன்பிஎல் போட்டியில் பிரபல வீரர் யூசுப் பதானும் விளையாடவுள்ளார். 

இந்நிலையில் மிகப்பெரிய ஜாக்பாட்டாக சுரேஷ் ரெய்னா டிஎன்பிஎல்-லில் இணைந்துள்ளார். இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் தவிர்க்கப்பட்டுள்ள ரெய்னா, இந்த வருட டிஎன்பிஎல் போட்டியில் களமிறங்குகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ரெய்னா, டிஎன்பிஎல்-லிலும் விளையாடுவது தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டு டிவிஷன் லீக் அணியான கிராண்ட் ஸ்லாமில் ரெய்னா இணைந்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் டிஎன்பிஎல் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகிறார். 

ரெய்னா மட்டுமல்லாமல் பிரபல ஐபிஎல் வீரர்கள் பலரும் இந்த வருட டிஎன்பிஎல்-லில் இணைந்துள்ளதால் இந்த வருட டிஎன்பில் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரெய் ரெய்னா, யூசுப் பதான், மனோஜ் திவாரி, உன்முக்த் சந்த், சஞ்சு சாம்சன், மனன் வோஹ்ரா, அசோக் டிண்டா, சந்தீப் சர்மா, சஹால், பியூஷ் சாவ்லா, பவன் நெகி, பசில் தம்பி, ராகுல் திருப்பதி என முக்கியமான ஐபிஎல் வீரர்கள் இந்த வருட டிஎன்பிஎல் ஏலத்தில் பங்குபெறவுள்ளார்கள். மொத்தமாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 88 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள். இவர்களில் இருந்து 24 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். 

டிஎன்பிஎல் விதிமுறைகளின்படி ஒவ்வொரு அணியும் 3 வெளிமாநில வீரர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். அதில் இருவர் போட்டியில் விளையாடும் அணியில் இடம்பெறலாம்.

ஜுன் 23 அன்று ஏலம் நடைபெறுகிறது. டிஎன்பிஎல் போட்டி ஜுலை 22 அன்று தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com