சூதாட்டத்தினால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுகிறதா? அமீர் சோஹைலின் பேட்டியால் பரபரப்பு!

பாகிஸ்தான் அணியினர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஜெயித்து வருகிறார்கள் என்கிற அர்த்தம்..
சூதாட்டத்தினால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுகிறதா? அமீர் சோஹைலின் பேட்டியால் பரபரப்பு!

பாகிஸ்தான் அணியினர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஜெயித்து வருகிறார்கள் என்கிற அர்த்தம் வரும்படியாகப் முன்னாள் வீரர் அமீர் சோஹைல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி யில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 4-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

பாகிஸ்தானின் வெற்றி குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்த முன்னாள் வீரர் அமீர் சோஹைல் பாகிஸ்தான் கேப்டனைக் கடுமையாக விமரிசித்தார். யாரால் கேப்டன் சர்ஃபராஸ் வெற்றி பெற்றார் என்று என்னைக் கேட்டால், பிரார்த்தனைகளும் கடவுளுமே காரணம் என்று சொல்வேன். அந்தப் பிரார்த்தனைகளை நடத்திய வழிநடத்துபவர்களின் பெயரைக் கூறமாட்டேன். யாராவது அவரிடம் இதைக் கூறவேண்டும். கேப்டன் சர்ஃபராஸ் சிறப்பாக எதுவும் செய்யவில்லை. மற்றவர்களால் அவருக்குக் கிடைத்த வெற்றி இது என்று கூறினார்.

இதையடுத்து சூதாட்டத்தினால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அமீர் சோஹைல் கூறுவதாக சர்ச்சை எழுந்தது. அமீர் சோஹைலின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும் எழுந்தன.

இந்நிலையில் தன் பேட்டி குறித்து சோஹைல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

இலங்கையை வெற்றி பெற்ற நாளன்று ஜாவத் மியாண்டடின் பிறந்தநாள். அந்த வெற்றியை அவருக்குச் சமர்ப்பணம் செய்யச் சொல்லி வீரர்கள் கூறியபோது கேப்டன் சர்ஃபராஸ் மறுத்துள்ளார். ஏனெனில் இந்த அணியை மியாண்டடும் விமரிசித்துள்ளார்.

இதனால் பாகிஸ்தான் கேப்டனை விமரிசனம் செய்தேன். அடுத்ததாக சர்ஃபராஸை வழிநடத்துபவர்களின் பெயரைக் கூறமாட்டேன் என்றேன். அவர் தவறாக ஆடியதாகவோ அல்லது சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்றோ நான் கூறவில்லை. என் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com