உலக ஹாக்கி லீக் அரையிறுதி: இந்தியா தோல்வி

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா கடுமையாகப் போராடி 1}3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய இந்திய}நெதர்லாந்து வீரர்கள்.
லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய இந்திய}நெதர்லாந்து வீரர்கள்.

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா கடுமையாகப் போராடி 1}3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு நெதர்லாந்து அணிக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 2}ஆவது நிமிடத்திலேயே அந்த அணியின் தியரி பிரிங்க்மேன் கோல் அடித்தார். இந்திய அணி தனது கோல் வாய்ப்புக்கு போட்டியிட்டு வந்த நிலையில் நெதர்லாந்து அடுத்தடுத்த கோல்களை அடித்தது.
ஆட்டத்தின் 12}ஆவது நிமிடத்தில் அந்த அணியின் சந்தர் பார்டும், 24}ஆவது நிமிடத்தில் மிர்கோ புருய்ஜ்சரும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் நெதர்லாந்து அணி 3}0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் அணிக்கான முதல் கோல் அடித்தார்.
எனினும், தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணிக்கு வேறு கோல் வாய்ப்புகளை வழங்காத நெதர்லாந்து இறுதியாக 3}1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதனிடையே, முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு ஏற்கெனவே முன்னேறிவிட்டதால், இந்தத் தோல்வி இந்திய அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்தியா தனது காலிறுதியில் மலேசியாவை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.
இதனிடையே, ஆடிய 4 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்த நெதர்லாந்து "பி' பிரிவில் முதலிடத்தை பிடித்தது. 4}இல் 3 ஆட்டங்களில் வென்ற இந்தியா 2}ஆவது இடம் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com