ஹிமாசல பிரதேச ஒலிம்பிக்: தொடங்கி வைக்கிறார் "கிரேட் காளி'

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக நடைபெறவுள்ள மாநில ஒலிம்பிக் போட்டிகளை சர்வதேச மல்யுத்த வீரரான "கிரேட் காளி' என்று அழைக்கப்படும் தலிப் சிங் ராணா வியாழக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார்.

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக நடைபெறவுள்ள மாநில ஒலிம்பிக் போட்டிகளை சர்வதேச மல்யுத்த வீரரான "கிரேட் காளி' என்று அழைக்கப்படும் தலிப் சிங் ராணா வியாழக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் மற்றும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, கடந்த 17}ஆம் தேதி சிம்லாவில் தொடங்கி மாநிலம் முழுவதும் வலம் வரும் ஒலிம்பிக் ஜோதி, செவ்வாய்க்கிழமை குல்லு பகுதியை எட்டியது. போட்டி தொடக்க நாளான வியாழக்கிழமை இந்த ஜோதி ஹமீர்பூர் வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஹிமாசல பிரதேச ஒலிம்பிக் சங்கம் செய்துள்ளது.
வரும் 22}ஆம் தேதி முதல் 25}ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநில ஒலிம்பிக்கில் ஹாக்கி, தடகளம், குத்துச் சண்டை, கூடைப் பந்து, ஜூடோ, கபடி, வாலிபால், மல்யுத்தம், கோ}கோ, பளுதூக்குதல், துப்பாக்கி சூடுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த ஒலிம்பிக்கில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 50,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, ஹிமாசல பிரதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் அனுராக் தாக்குர் கூறியதாவது: மாநில ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்துக்கான வரவேற்பு அதிகளவில் உள்ளது. இதேபோல், போட்டியில் பங்கேற்போரின் எண்ணிக்கையும் அதிகளவில் இருக்கும் என்று எதிர்நோக்குகிறோம். வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த சூழ்நிலைகளையும், தடங்களையும் அடிமட்டத்தில் இருந்தே ஏற்படுத்தித் தருவதில் ஹிமாசல பிரதேச ஒலிம்பிக் சங்கம் உறுதிபூண்டுள்ளது.
இந்த முயற்சியானது, எதிர்வரும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் பதக்கங்களை பெற்றுத் தரும் என நம்புகிறோம் என்று அனுராக் தாக்குர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com