உலக ஹாக்கி லீக்: காலிறுதியில் இந்தியா தோல்வி

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது.

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது.

இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, போட்டியிலிருந்து வெளியேறியது.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் இந்தியாவும், மலேசியாவும் மோதின. இதில் 19 மற்றும் 20-ஆவது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பில் மலேசியா இரு கோல்களை அடித்தது.
இதையடுத்து சரிவிலிருந்து மீளப் போராடிய இந்திய அணி 24 மற்றும் 26-ஆவது நிமிடங்கள் கோலடித்தது. இந்த 2 கோலையும் ரமன்தீப் சிங் அடித்தார். இதனால் ஸ்கோர் சமநிலையை எட்டியது.
இதையடுத்து ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல, 48-ஆவது நிமிடத்தில் மலேசியாவுக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் ரஹிம் கோலடிக்க, அதுவே வெற்றிக்கோலாக அமைந்தது. கடந்த 2 மாதங்களில் தொடர்ந்து 2-ஆவது முறையாக மலேசியாவிடம் தோற்றுள்ளது இந்தியா.
அதேநேரத்தில் இந்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய மலேசியா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டது. மலேசியா தனது அரையிறுதியில் ஆர்ஜென்டீனாவை சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com