மகளிர் உலகக் கோப்பை: வெற்றியோடு தொடங்கியது இந்தியா

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இங்கிலாந்தின் டெர்பி நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் பூனம் ரெüத்-ஸ்மிருதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26.5 ஓவர்களில் 144 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ஸ்மிருதி 72 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பூனம் ரெüத்துடன் இணைந்தார் கேப்டன் மிதாலி ராஜ். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய பூனம் ரெüத் 134 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஹர்மான்பிரீத் கெüர் களமிறங்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய கேப்டன் மிதாலி ராஜ் 57 பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 73 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்தியா 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. ஹர்மான்பிரீத் கெüர் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் கே.சி. நைட் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து தோல்வி: பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 47.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்சன் 81, கே.சி.நைட் 46 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மிதாலி உலக சாதனை: இந்த ஆட்டத்தில் அரை சதம் கண்டதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 7 அரை சதங்களை விளாசிய முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com