உலக சாதனை இன்னிங்க்ஸுக்கு முன்பாக ஓய்வாக அமர்ந்து புத்தக வாசிப்பு:  அசத்தல் மிதாலி ராஜ்!

லண்டனில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி காட்டிய இந்திய கேப்டன் மித்தாலி ராஜ், தனது சாதனை இன்னிங்க்ஸுக்கு முன்பாக ...
உலக சாதனை இன்னிங்க்ஸுக்கு முன்பாக ஓய்வாக அமர்ந்து புத்தக வாசிப்பு:  அசத்தல் மிதாலி ராஜ்!

லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி காட்டிய இந்திய கேப்டன் மித்தாலி ராஜ், தனது சாதனை இன்னிங்க்ஸுக்கு முன்பாக பவுண்டரி எல்லையில் ஓய்வாக அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த புகைப்படமானது தற்பொழுது வைரலாக பரவி வருகிறது  

இங்கிலாந்து டெர்பி நகரில் 11வது ஒரு நாள் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இங்தியா உட்பட 8 அணிகள் மோதும் இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் தனது முதல் ஆட்டத்தை இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் விளையாடிய துவக்க ஆட்டகாரர்களான பூணம் ராத், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தாலும் மூன்றாவதாகக் களம் இறங்கிய கேப்டன் மிதாலி ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சிதறடித்த மித்தாலி 73 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களை இந்திய அணி குவித்திருந்தது. இந்த இலக்கை எட்ட முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் முடிவில் 246 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் ஆட்ட நாயகியாகவும் மிதாலி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் அவர் 50 ரன்களை எடுத்த பொழுதுஅவர் இரண்டி சாதனைகளை படைத்தார். ஒன்று ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மிதாலி அடிக்கும் 7-வது அரை சதம் இது. முன்னதாக தொடர்ச்சியாக 6 அரை சதங்களை அடித்திருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லிண்ட்சே, பெர்ரி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லொட்டி ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்தார்.

மேலும் ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தனது 47-வது அரை சதத்தையும் நேற்று பதிவு செய்து, அதிக அரை சத்தங்களை அடித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையையம் அவர் படைத்தார்.

தற்பொழுது இந்த 'ஸ்பெஷல்' இன்னிங்க்ஸை ஆடுவதற்கு முன்னதாக, மைதானத்தின் பவுண்டரி எல்லையில் ஓய்வாக அமர்ந்து, புத்தகம் ஒன்றை மித்தாலி வாசித்துக் கொண்டிருந்த புகைப்படமானது தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. ஆட்ட நிலைமை பற்றி கொஞ்சம் கூட பதட்டம் எதுவும் இன்றி, அவர் வெகு இயல்பாக 'எசென்ஷியல் ரூமி' என்னும் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தது பற்றி  டிவிட்டரில் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருந்தனர்.

இது பற்றி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்  பதில் அளித்திருந்த மிதாலி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், 'அது ஒன்றும் இல்லை,அன்றைக்கு நிலவிய காலநிலை புத்தகம் வாசிப்பதற்கு மிகவும் ஏதுவாக இருந்தது' என்று தன்னுடைய 'கூல்' பாணியிலேயே பதிலளித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com