உலக ஹாக்கி லீக்: இந்தியாவுக்கு 6-ஆவது இடம்

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் 5 மற்றும் 6-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் கனடாவிடம் தோல்வி கண்டது. இதனால் இந்திய அணிக்கு 6-ஆவது இடமே கிடைத்தது.

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் 5 மற்றும் 6-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் கனடாவிடம் தோல்வி கண்டது. இதனால் இந்திய அணிக்கு 6-ஆவது இடமே கிடைத்தது.

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 3-ஆவது நிமிடத்தில் கோர்டான் ஜான்ஸ்டன் கோலடிக்க, கனடா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு 7 மற்றும் 22-ஆவது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மான்பிரீத் சிங் கோலடிக்க, இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து சரிவிலிருந்து மீள்வதற்கு போராடிய கனடா அணி 40-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை அந்த அணியின் கீகன் பெரைரா அடித்தார். அதைத் தொடர்ந்து 44-ஆவது நிமிடத்தில் கோர்டான் ஜான்ஸ்டன் தனது 2-ஆவது கோலை அடிக்க, அதுவே வெற்றிக் கோலாக அமைந்தது. இதனால் கனடா 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 5-ஆவது இடத்தைப் பிடித்த கனடா அணி, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாடவும் தகுதி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com