ஹாலே ஓபன்: ரோஜர் ஃபெடரர் சாம்பியன்

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 9-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஹாலே ஓபன்: ரோஜர் ஃபெடரர் சாம்பியன்

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 9-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜெர்மனியின் ஹாலே நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஃபெடரர் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்தார். ஆரம்பம் முதலே ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தியதால், இந்த ஆட்டம் 53 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
வெற்றி குறித்துப் பேசிய ஃபெடரர், "சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடும் உணர்வு எனக்குள் ஏற்பட்டது. நீண்ட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸூக்கு திரும்பியிருக்கும் நிலையில், எனது ஆட்டம் அற்புதமாக அமைந்திருக்கிறது. விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க முழு உடற்தகுதியோடு இருக்கிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com