5 மாத ஓய்வு: ஆசிய கோப்பை வாய்ப்பை இழக்கிறார் ஸ்ரீஜேஷ்

இந்திய ஹாக்கி அணி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு 5 மாத ஓய்வில் இருப்பதால், ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கி அணி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு 5 மாத ஓய்வில் இருப்பதால், ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்}மே மாதங்களில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியின்போது ஸ்ரீஜேஷுக்கு வலது மூட்டுப் பகுதியில் தசைநார் கிழிந்து காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக லண்டனில் சமீபத்தில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு மும்பையில் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது ஓய்வில் உள்ளார்.
இதுகுறித்து இந்திய ஹாக்கி அணி செயல்பாட்டு இயக்குநர் டேவிட் ஜான் கூறியதாவது:
சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஸ்ரீஜேஷ் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு, உடல்தகுதி பெறுவதற்கு குறைந்தது 5 முதல் 6 மாதங்கள் ஆகும். ஆகவே, அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் அவர் விளையாட மாட்டார். இருப்பினும், டிசம்பர் மாதம் புவனேசுவரத்தில் நடைபெறவுள்ள உலக ஹாக்கி லீக் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்பதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய நிலையில் ஸ்ரீஜேஷைத் தவிர சிறப்பான கோல் கீப்பர்கள் நம்மிடம் இல்லை. விகாஸ் தாஹியா மற்றும் ஆகாஷ் சிக்தே ஆகியோர் இளம் வீரர்களாவர். எனவே, டிசம்பருக்குள்ளாக மாற்று கோல்கீப்பர் ஒருவரை உருவாக்க வேண்டும்.
அதேவேளையில், நமது தடுப்பு ஆட்டத்தையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. லண்டனில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியின்போது தடுப்பு ஆட்டக்காரர்களிடம் போதிய வேகம் இல்லாதது வெளிப்பட்டது. ஆகவே, விரைவாகச் செயல்படும் தடுப்பாட்டக்காரர்களை நியமிக்க வேண்டும். ரகுநாத் தகுந்த வேகத்துடன் இல்லை. ரூபிந்தர் பால் சிங், ஹர்மன்பிரீத் ஆகியோர் தகுந்த வேகத்துடன் உள்ளனர்.
இருப்பினும், தற்போதைய அணியில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று டேவிட் ஜான் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com