சீன தைபே பாட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிரில் வர்மா, ஸ்ரீ கிருஷ்ண பிரியா

சீன தைபே கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியர்களான சிரில் வர்மா, ஸ்ரீ கிருஷ்ண பிரியா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

சீன தைபே கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியர்களான சிரில் வர்மா, ஸ்ரீ கிருஷ்ண பிரியா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில், சீன தைபேவின் சியா ஹாவ் லீயை எதிர்கொண்டார் சிரில் வர்மா. இருவருக்கும் இடையே 51 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் சிரில் வர்மா 16-21, 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்றார்.
அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மலேசியாவின் லீ ஸீ ஜியாவை சந்திக்கவுள்ளார். இவர், நடப்புச் சாம்பியனும், இந்தியருமான செளரவ் வர்மாவை முதல் சுற்றில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீ கிருஷ்ண பிரியா தனது 2-ஆவது சுற்றில் சியாங் மேய் ஹூயை எதிர்கொண்டு, 21-17, 20-22, 21-9 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தினார். ஸ்ரீ கிருஷ்ண பிரியா தனது அடுத்த சுற்றில் சீன தைபேவின் ஷுவோ யன் சங் உடன் மோதவுள்ளார்.
இந்நிலையில், இதர இந்தியர்களான சாய் உத்தெஜிதா ராவ் சுக்கா, அபிஷேக் ஏலேகர், ஹர்ஷீல் தானி உள்ளிட்டோர் தங்களது சுற்றில் தோல்வியை தழுவினர்.
இதில் உத்தெஜிதா ராவ் 7-21, 17-21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் நா யோங் கிம்மிடம் வீழ்ந்தார். அதே நாட்டைச் சேர்ந்த ஹா யங் வூங்கிடம் 12-21, 6-21 என்ற செட் கணக்கில் ஹர்ஷீல் தானி தோல்வி கண்டார். அபிஷேக் ஏலேகர், 17-21, 21-17, 6-21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சியூங் ஹூன் வூவிடம் வீழ்ந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நிகர் கர்க்-அங்குர் சங்பங் ராய் ஜோடி, சீன தைபேவின் கோ சி சாங்-லியாவ் குவான் ஹாவிடம் 5-21, 8-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com