டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்! இந்தியா சிறப்பான பந்துவீச்சு!

3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்! இந்தியா சிறப்பான பந்துவீச்சு!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ராஞ்சியில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்து, 137.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 178 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இந்தியா 152 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா அற்புதமாக ஆடி இரட்டைச் சதம் அடித்தார். அவருடன் தகுந்த பார்ட்னர்ஷிப் அமைத்த ரித்திமான் சாஹா சதம் கடந்தார். இதையடுத்து, தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. வார்னர் 14, நாதன் லயன் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரென்ஷா 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 8 விக்கெட்டுகளைக் கொண்டு 129 ரன்களை எடுக்க வேண்டிய நிலைமையில் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சந்திக்கமுடியாமல் தடுமாறியது. இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ரென்ஷா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஜடேஜா ஸ்மித்தை 21 ரன்களில் வீழ்த்தினார். முக்கியமான இரு வீரர்களை இழந்து தடுமாறி வருகிறது ஆஸி. அணி.

உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 36 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மார்ஷ் 15, ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்னமும் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 69 ரன்கள் பின்தங்கியுள்ளது ஆஸி. அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com