டிராவில் முடிந்தது ராஞ்சி டெஸ்ட்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திங்கள்கிழமை டிராவில் முடிந்தது.
டிராவில் முடிந்தது ராஞ்சி டெஸ்ட்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திங்கள்கிழமை டிராவில் முடிந்தது. இதையடுத்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 3 போட்டிகள் முடிந்துள்ளபோதிலும் 1-1 என்ற நிலையிலேயே தொடர் சமனாக உள்ளது.

இந்தப் போட்டியில், 2-ஆவது இன்னிங்ஸ் ஆடிவந்த ஆஸ்திரேலியா ஆட்டநேர முடிவில் 100 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. இறுதிநாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, இரு அணிகளுக்கு இடையே கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. மொத்தம் 137.3 ஓவர்களை சந்தித்த அந்த அணி, அனைத்து விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 361 பந்துகளை சந்தித்து 17 பவுண்டரிகளுடன் 178 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் ஜடேஜா,49.3 ஓவர்கள் வீசி 124 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்திய அணி, 210 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அணியில், அற்புதமாக ஆடி ரன்களை குவித்த புஜாரா-சாஹா ஜோடி, 7-ஆவது விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. இதில் 525 பந்துகளை சந்தித்த புஜாரா, 21 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் கடந்து 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதம் கடந்த ரித்திமான் சாஹா, மொத்தம் 233 பந்துகளுக்கு 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 117 ரன்கள் எடுத்து வீழ்ந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் பட் கம்மின்ஸ் 39 ஓவர்கள் வீசி 106 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா முதலில் தடுமாறியது. 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் கடைசி நாளான திங்கள்கிழமை தடுப்பாட்டம் ஆடிய அந்த அணியில், ரென்ஷா 15, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷான் மார்ஷ்-ஹேண்ட்ஸ்காம்ப் இணை 5-ஆவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேகரித்தது.
ஹேண்ட்ஸ்காம்ப் 126 பந்துகளிலும், ஷான் மார்ஷ் 190 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். இந்நிலையில், 53 ரன்கள் எடுத்திருந்த ஷான் மார்ஷ், ஜடேஜா பந்துவீச்சில் முரளி விஜயிடம் கேட்ச் ஆனார்.
தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 2 ரன்களில் ஆட்டமிழக்க, மேத்யூ வேட் களத்துக்கு வந்தார். ஆட்டநேர முடிவில் 100 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. ஹேண்ட்ஸ்காம்ப் 72, வேட் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்தியத் தரப்பில், ஜடேஜா 2 விக்கெட், அஸ்வின், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக, 202 ரன்கள் விளாசிய புஜாரா அறிவிக்கப்பட்டார்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா-451 ( ஸ்மித் 178*; மேக்ஸ்வெல் 104; ஜடேஜா 5வி/124)
இந்தியா- 603 (புஜாரா 202; சாஹா 117; கம்மின்ஸ் 4வி/106)

ஆஸ்திரேலியா

டேவிட் வார்னர் (பி) ஜடேஜா 14 16
மட் ரென்ஷா எல்பிடபிள்யூ (பி) சர்மா 15 84
நாதன் லயன் (பி) ஜடேஜா 2 7
ஸ்டீவன் ஸ்மித் (பி) ஜடேஜா 21 68
ஷான் மார்ஷ் (சி) விஜய் (பி) ஜடேஜா 53 197
ஹேண்ட்ஸ்காம்ப் நாட் அவுட் 72 200
மேக்ஸ்வெல் (சி) விஜய் (பி) அஸ்வின் 2 15
மேத்யூ வேட் நாட் அவுட் 9 16
உதிரிகள் 16

விக்கெட் வீழ்ச்சி: 1-17(வார்னர்), 2-23(நாதன் லயன்), 3-59(ரென்ஷா), 4-63(ஸ்மித்), 5-187(மார்ஷ்),
6-190(மேக்ஸ்வெல்).


விக்கெட் வீழ்ச்சி: அஸ்வின் 30-10-71-1, ஜடேஜா 44-18-54-4, உமேஷ் யாதவ் 15-2-36-0, இஷாந்த் சர்மா 11-0-30-1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com