விஜய் ஹசாரே டிராபி: தமிழகம் சாம்பியன்

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் ஆனது.
கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் தமிழக அணியினர்.
கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் தமிழக அணியினர்.

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் ஆனது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி, 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்கால் அணி, 45.5 ஓவர்களில் 180 ரன்களுக்கு சுருண்டது.
முன்னதாக, தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதில் தினேஷ் கார்த்திக் அபாரமாக ஆடி சதம் கடந்தார். மொத்தம் 120 பந்துகளை சந்தித்த அவர், 14 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர் கெளஷிக் காந்தி 15, பாபா இந்திரஜித் 32, வாஷிங்டன் சுந்தர் 22, அஸ்வின் கிறிஸ்ட் 10 ரன்களில் ஆட்டமிழக்க, இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். அடுத்தடுத்த விக்கெட் சரிவால், 47.2 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழக அணி. பெங்கால் தரப்பில் முகமது சமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 218 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்கால் அணியில் சுதிப் சாட்டர்ஜி மட்டும் அதிகபட்சமாக அரைசதம் கடந்தார். மொத்தம் 79 பந்துகளை சந்தித்த அவர், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 45.5 ஓவர்களில் 180 ரன்களுக்குள் வீழ்ந்தது பெங்கால் அணி. தமிழக தரப்பில், அஸ்வின் கிறிஸ்ட், முகமது, ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். விஜய் சங்கர், பாபா அபராஜித், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சதமடித்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com