தர்மசாலா மைதானத்தால் இந்திய அணிக்கு நெருக்கடி: மிட்செல் ஜான்சன்

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தர்மசாலா மைதானம், இந்திய வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் என்று..
தர்மசாலா மைதானத்தால் இந்திய அணிக்கு நெருக்கடி: மிட்செல் ஜான்சன்

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தர்மசாலா மைதானம், இந்திய வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

கடைசி டெஸ்ட் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. தர்மசாலாவில் நடைபெறுகிற கடைசி டெஸ்ட்டை வெல்லப் போகிறவர் யார் என்கிற ஆவல் அதிகமாக உள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தர்மசாலா மைதானம், அற்புதமானதாகும். அந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலும் நம்பிக்கையுடனும், இந்திய வீரர்கள் சற்று நெருக்கடியுடனும் கடைசி டெஸ்டை சந்திப்பார்கள். இந்திய அணியினர் அபரிமிதமான நம்பிக்கையுடன் இருந்தனர் என்பதை அவர்களது ஸ்கோர் காட்டுகிறது. அனேகமாக தர்மசாலா டெஸ்டில் ஒரு சுழற்பந்துவீச்சாளருக்கு (ஸ்டீவ் ஓ'கீஃப்) பதிலாக, வேகப்பந்து வீச்சாளரை (ஜாக்சன் பேர்டு) ஆஸ்திரேலிய அணி சேர்க்கும் எனத் தெரிகிறது.
தர்மசாலா ஆடுகளத்துக்கு ஜாக்சன் பேர்டு பொருத்தமானவராக இருப்பார். என்னைப் பொருத்த வரையில் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று ஜான்சன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com