டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய 'சைனாமேன்' குல்தீப் யாதவ்! (வீடியோ)

சர்வதேசப் போட்டியில் விளையாடும் முதல் இந்திய சைனாமேன் வகை பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அடைந்துள்ளார்..
டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய 'சைனாமேன்' குல்தீப் யாதவ்! (வீடியோ)

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

காயம் காரணமாக கேப்டன் கோலி விலகியுள்ளார். இதனால் இளம் வீரரான 22 வயது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போட்டிகளில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வரும் குல்தீப் யாதவ், துலிப் டிராபி, ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். 

சர்வதேசப் போட்டியில் விளையாடும் முதல் இந்திய சைனாமேன் வகை பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் குல்தீப் யாதவ். இன்றைய டெஸ்ட் போட்டியில் முதலில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். பிறகு ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்குப் பலமாக விளங்கினார். 1 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் என்கிற நிலையில் இருந்து குல்தீப் யாதவின் அற்புதமான பந்துவீச்சினாலும் ரஹானேவின் சிறந்த தலைமைப் பண்பினாலும் ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 300 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

விக்கெட்டுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com