அரையிறுதியில் மோதிய சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பெங்களூரூ ராணுவ அணி வீரர்கள்.
அரையிறுதியில் மோதிய சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பெங்களூரூ ராணுவ அணி வீரர்கள்.

ஃபெடரேஷன் கோப்பை கூடைப்பந்து: இறுதிச் சுற்றில் ஐ.ஓ.பி., ஓ.என்.ஜி.சி. அணிகள்

ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணியும், ஓ.என்.ஜி.சி. அணியும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. மகளிர் பிரிவில் தெற்கு ரயில்வே அணியும், சத்தீஸ்கர் அணியும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகம், அரைஸ் அறக்கட்டளை, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 31-ஆவது தேசிய கூடைப்பந்துப் போட்டிகள் கோவையில் கடந்த 22-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
இதில், நான்காம் நாளான சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆடவர் பிரிவு அரையிறுதியில் ஐஓபி அணி 84-64 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரூ ராணுவ அணியை வென்றது. மற்றொரு அரையிறுதியில் டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணி 72-49 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய விமானப் படை அணியை வீழ்த்தியது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் ஐஓபி அணியும், டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணியும் மோதுகின்றன.
மகளிர் பிரிவு அரையிறுதியில் தெற்கு ரயில்வே கடும் போராட்டத்துக்குப் பிறகு 73-67 என்ற கணக்கில் தமிழக அணியை வீழ்த்தியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் சத்தீஸ்கர் அணி கடுமையாகப் போராடி 99-98 என்ற கணக்கில் மேற்கு வங்க அணியைத் தோற்கடித்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் தெற்கு ரயில்வே, சத்தீஸ்கர் அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com