மியாமி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் ஃபெடரர், வாவ்ரிங்கா

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ரோஜர் ஃபெடரர்.
மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ரோஜர் ஃபெடரர்.

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் ரோஜர் ஃபெடரர் 7-6 (2), 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் தகுதி நிலை வீரரான பிரான்செஸ் டியாஃபோவை தோற்கடித்தார். இந்த சீசனில் இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஃபெடரர், அதில் ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளார்.

மற்றொரு 2-ஆவது சுற்றில் வாவ்ரிங்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் ஹோராஸியோ ùஸபல்லோûஸ தோற்கடித்தார். வாவ்ரிங்கா தனது 3-ஆவது சுற்றில் டுனிசியாவின் மலேக் ஜேஸ்ரியை எதிர்கொள்கிறார். முன்னதாக மலேக் தனது 2-ஆவது சுற்றில் 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸூக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
அக்னீஸ்கா அதிர்ச்சித் தோல்வி: மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 0-6, 3-6 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் லூசிச் பரோனியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜங் ஷூவாயையும், செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் யூலியா புதின்சேவாவையும் தோற்கடித்து 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com