நான்காம் இடம் யாருக்கு? கடுமையான போட்டியில் புணே & பஞ்சாப்!

அந்த ஒரு ஆட்டம் பிளேஆஃப் செல்லக்கூடிய 4-வது அணியை நிர்ணயிக்கும்...
நான்காம் இடம் யாருக்கு? கடுமையான போட்டியில் புணே & பஞ்சாப்!

இந்த ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப்-புக்குச் செல்லக்கூடிய அணிகள் குறித்த ஒரு முடிவை எடுப்பது எளிதாக உள்ளது. முக்கியமாக, முதல் மூன்று அணிகள். 

கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு பிளேஆஃப்-பில் இருக்கை கிடைத்தாயிற்று. மிச்சமுள்ள ஒரே ஒரு இடத்துக்குத்தான் மீதமுள்ள லீக் ஆட்டங்கள் அடுத்த இரு வாரங்களுக்கு நடக்கவுள்ளன.

14 புள்ளிகள் உடைய கொல்கத்தா, மும்பை ஆகிய அணிகளுக்கு இன்னும் ஒரு வெற்றி கிடைத்தால் போதும் பிளேஆஃப் உறுதி. கொல்கத்தாவுக்கு இன்னும் 4 ஆட்டங்களும் மும்பைக்கு 5 ஆட்டங்களும் மீதமுள்ளன. எனவே இந்த இரு அணிகளும் பிளேஆஃப் செல்லாது என்று எண்ணவே வேண்டியதில்லை.

அடுத்ததாக 10 ஆட்டங்களில் 13 புள்ளிகள் கொண்ட ஹைதராபாத்தும் பிளேஆஃப்-பைக் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. மீதமுள்ள 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் உறுதி. இல்லை ஒரு வெற்றி கூட அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திவிடும். எனவே ஹைதராபாத்தைச் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. 

அணிகள் போட்டிவெற்றிதோல்விமுடிவு இல்லைபுள்ளிகள்
கொல்கத்தா1073-14
மும்பை972-14
ஹைதராபாத்1063113
புணே954-10
பஞ்சாப்945-8
குஜராத்936-6
பெங்களூர்102715
டெல்லி826-4

4-வது இடம் யாருக்கு? இதற்கு இரு அணிகள் இப்போதைக்குப் போட்டியிடுகின்றன என்று சொல்லலாம். மற்ற அணிகள் இது எட்டாக்கனி. எல்லா ஆட்டங்களிலும் ஜெயித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலை. 

எனவே தற்போதைக்கு 4-ம் இடத்தைப் பிடிக்க இரு அணிகளுக்கிடையே கடும் போட்டி. 

முதல் வாய்ப்பு புணே அணிக்குக் கிட்டலாம். 9 ஆட்டங்களில் 10 புள்ளிகள் வைத்திருக்கும் புணே, மீதமுள்ள 5 ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களில் வென்றால் பிளேஆஃப் உறுதி.

அதேபோல 9 ஆட்டங்களில் 8 புள்ளிகள் வைத்திருக்கும் பஞ்சாப், மீதமுள்ள 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களை வென்றால் பிளேஆஃப் பக்கம் செல்லலாம். எனவே இந்த இரு அணிகளில் புணே அணிக்கே வாய்ப்பு அதிகம் எனலாம்.

குஜராத் அணி, மீதமுள்ள 5 ஆட்டங்களில் ஐந்தையும் வென்றாகவேண்டும். அதேபோல டெல்லி அணி மீதமுள்ள 6 ஆட்டங்கள் அனைத்தையும் வென்றால் மட்டுமே 16 புள்ளிகள் கிடைத்து அடுத்தச் சுற்றுக்குச் செல்லமுடியும். பெங்களூர் அணிக்குச் சுத்தமாக வாய்ப்பில்லை. மீதமுள்ள 4 ஆட்டங்களையும் வென்றாலும் அந்த அணிக்கு 13 புள்ளிகள்தான் கிடைக்கும். 13 புள்ளிகளுடன் ஐபிஎல்-லில் எந்த அணியும் பிளேஆஃப்-புக்குச் சென்றதில்லை. கடைசியில் 14 புள்ளிகள் இருந்தாலே அடுத்தச் சுற்று என்கிற நிலைமைகூட உருவாகலாம். அதற்கு நிறைய அதிர்ச்சிகள் ஏற்படவேண்டும். பார்க்கலாம். அந்தளவுக்கு ஐபிஎல் செல்லுமா என. 

லீக் சுற்றின் கடைசி தினமான மே 14 அன்று நடைபெறவுள்ள மாலை 4 மணி ஆட்டத்தில் புணேவும் பஞ்சாப்பும் மோதுகின்றன. அந்த ஒரு ஆட்டத்துக்கு பிளேஆஃப் செல்லக்கூடிய 4-வது அணியை நிர்ணயிக்கும் வாய்ப்பு அதிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com