புதிய பரபரப்பு: தோனிக்கு இந்தியா சிமெண்ட்ஸ் தருகிற சம்பள விவரங்களை வெளியிட்டார் லலித் மோடி!

சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்ற தோனிக்கு அடிப்படைச் சம்பளமாக மாதத்துக்கு ரூ. 43,000...
புதிய பரபரப்பு: தோனிக்கு இந்தியா சிமெண்ட்ஸ் தருகிற சம்பள விவரங்களை வெளியிட்டார் லலித் மோடி!

லலித் மோடி - என். சீனிவாசன் இடையேயான மோதல் இன்னும் முற்றுப்பெறவில்லை. வெவ்வேறு விதத்தில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இந்தியா சிமெண்ட்ஸின் துணைத் தலைவராக 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் தோனி. அப்பதவி தொடர்பான ஒப்பந்த விவரங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் லலித் மோடி. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் தோனி இந்தப் பதவியை ஏற்றுக்கொண்ட காரணம் என்ன என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். 

இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியாவில் மட்டும்தான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் பிசிசிஐயின் முன்னாள் அதிகாரிகளால் தொடர்கின்றன. தோனியின் ஒப்பந்தம் புதிராக உள்ளது. வருடத்துக்கு நூற்றுக்கணக்கான கோடிகளைச் சம்பாதிக்கிறார். அவர் என். சீனிவாசனின் ஊழியராகப் பணியாற்ற எப்படி ஒப்புக்கொள்கிறார்? இதுபோல பல ஒப்பந்தங்கள் இருக்கும் என நான் சொல்லமுடியும் என்று கூறியுள்ளார். 

லலித் மோடி வெளியிட்ட ஒப்பந்தப் பத்திரத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்ற தோனிக்கு அடிப்படைச் சம்பளமாக மாதத்துக்கு ரூ. 43,000 வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர சம்பளத்தின் இதர சலுகைகளும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

லலித் மோடியின் மகன் ருசிர் மோடி ட்விட்டரில் கூறியதாவது: பிசிசிஐயில் இன்னமும் இதுபோன்று நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வருடத்துக்கு ரூ. 100 கோடி சம்பாதிக்கும் தோனி, இன்னமும் இந்தியா சிமெண்ட்ஸின் ஊழியராகப் பணியாற்றுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள லலித் மோடி, கடந்த 7 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com