ஐ.பி.எல்: பத்து சீசன்களில் ஏழாவது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கப் போகும் 'தல' தோனி! 

ஐ.பி.எல் பத்தாவது சீசனுக்கான இறுதி போட்டி புனே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இன்றிரவு நடைபெற இருக்கும் நிலையில், பத்து சீசன்களில் ஏழாவது முறையாக ...
ஐ.பி.எல்: பத்து சீசன்களில் ஏழாவது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கப் போகும் 'தல' தோனி! 

மும்பை: ஐ.பி.எல் பத்தாவது சீசனுக்கான இறுதி போட்டி புனே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இன்றிரவு நடைபெற இருக்கும் நிலையில், பத்து சீசன்களில் ஏழாவது முறையாக இறுதி போட்டியில் பங்கேற்கும் ஒரே வீரர் என்ற சாதனையை புனே அணி வீரரான தோனி நிகழ்த்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தால் 2008-ம் ஆண்டு 'இந்திய பிரிமீயர் லீக்' (ஐ.பி.எல்.) எனப்படும் டி20 கிரிகெட் போட்டித் தொடர்  உருவாக்கப்பட்டது. அந்த தொடரில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி களமிறங்கினார்.

தொடர்ந்து 2016-ம் ஆண்டு ஊழல் புகாரின் எதிரொலியாக சென்னை ஐ.பி.எல் தொடரிலிருந்து நீக்கப்படும் வரை அந்த அணிக்கு அவர் கேப்டனாக இருந்தார். அதன் பின்னர் புனே அணியில் தற்பொழுது விளையாடி வருகிறார். இந்த ஒன்பது வருடங்களில் நடைபெற்றுள்ள 9 இறுதி போட்டிகளில் ஆறு போட்டிகளில் அவர் தலைமையிலான அணி விளையாடி உள்ளது

அது பற்றிய விபரம் வருமாறு:

வருடம்

அணி

எதிர் அணி

முடிவு

1998

சென்னை சூப்பர் கிங்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

தோல்வி

2010

சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

வெற்றி

2011

சென்னை சூப்பர் கிங்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

வெற்றி

2012

சென்னை சூப்பர் கிங்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தோல்வி

2013

சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

தோல்வி

2015

சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

தோல்வி

தற்போது தோனி இடம்பிடித்துள்ள புனே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் தற்பொழுது கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக மட்டும், இந்த 10-ஆவது  சீசனில் 7-வது முறையாக இறுதிப் போட்டியில் 'தல' தோனி விளையாட இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com