மகளிர் ஹாக்கி: இந்தியா "ஒயிட் வாஷ்'

ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் ஹாக்கித் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் இந்திய அணி 2-6 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது.

ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் ஹாக்கித் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் இந்திய அணி 2-6 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது.
இதன்மூலம் 5-ஆவது தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, நியூஸிலாந்திடம் "ஒயிட் வாஷ்' ஆகியுள்ளது.
நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நியூஸிலாந்து அணி 4-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. தொடர்ந்து அசத்தலாக ஆடிய அந்த அணி 15-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது.
22-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இந்தியாவின் தீப் கிரேஸ் இக்கா கோலடிக்க, 27-ஆவது நிமிடத்தில் 3-ஆவது கோலை அடித்தது நியூஸிலாந்து. இதனிடையே 33-ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு 2-ஆவது பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் கேப்டன் ராணி கோலடித்தார்.
இதன்பிறகு இந்திய அணி அடுத்தடுத்து பெனால்டி வாய்ப்புளை உருவாக்கியபோதும், அதை கோலாக்க முடியவில்லை. அதேநேரத்தில் நியூஸிலாந்து அணி 37, 38, 40-ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோலடித்தது. இறுதியில் அந்த அணி 6-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com