330 ரன்களுக்குக் குறைவாக எடுப்பதில்லை: இங்கிலாந்து அணியைப் புகழ்ந்து தள்ளும் விராட் கோலி!

330 ரன்களுக்குக் குறைவாக எடுப்பதில்லை: இங்கிலாந்து அணியைப் புகழ்ந்து தள்ளும் விராட் கோலி!

அந்த அணியில் பலவீனமே இல்லை. அவர்களுடைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ளார்கள்...

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று சாம்பியன் டிராபி போட்டிக்குத் தயாராகி வருகிறது. ஜூன் 1-ம் தேதி போட்டி தொடங்குகிறது. 4-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.

செய்தியாளர்களிடம் இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது:

இந்திய அணியின் கேப்டனாக முதல்முறையாக ஒரு பெரிய ஐசிசி போட்டியில் பங்கேற்பது பரவசப்படுத்துகிறது. கடந்தமுறை அற்புதமாகப் பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் அருமையான தொடக்கம் அளித்த வீரர்கள் என இந்த மூன்று அம்சங்களும் கோப்பையை வெல்ல உதவின. இந்தமுறை இந்திய வீரர்கள் இன்னும் நல்ல உடற்தகுதியுடன் அனுபவத்துடன் உள்ளார்கள். 

தற்போது உலகின் சிறந்த இரு அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து அணி உள்ளது. அனைத்து வீரர்களும் பலவிதங்களில் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். இங்கிலாந்து அணி எல்லோருக்கும் சவாலாக இருக்கப்போகிறது. எனக்குத் தெரிந்தது அவர்கள் 330 ரன்களுக்குக் குறைவாக எடுப்பதில்லை. அந்த அணியில் பலவீனமே இல்லை. அவர்களுடைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ளார்கள் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com