ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லீட்ஸ் நகரில் புதன்கிழமை பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்தில் கேப்டன் இயான் மோர்கன் அதிகபட்சமாக 93 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் அடித்தார்.
தொடக்க வீரர் ஜேஸன் ராய் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, உடன் வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 60 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 37, பென் ஸ்டோக்ஸ் 25, ஜோஸ் பட்லர் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
இவ்வாறாக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. மொயீன் அலி அரைசதம் கடந்து 51 பந்துகளுக்கு 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 77 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கிறிஸ் மோரிஸ், அங்கிலே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ரபாடா, வேய்ன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 340 ரன்களை இலக்காகக் கொண்டு களம் கண்ட தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரரம் ஆம்லா அதிகபட்சமாக 76 பந்துகளுக்கு 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்தார்.
அடுத்தபடியாக டு பிளெஸ்ஸிஸ் 61 பந்துகளுக்கு 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள், டி வில்லியர்ஸ் 38 பந்துகளுக்கு 7 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தனர். டி காக் 5, டுமினி 15, மில்லர் 11, கிறிஸ் மோரிஸ் 5, வேய்ன் 19, அங்கிலே 4, ரபாடா 19 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 45 ஓவர்களிலேயே 267 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆதில் ரஷீத், மொயீன் அலி தலா 2, மார்க் வுட், லியாம் பிளங்கெட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மொயீன் அலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com