2007 உலகக்கோப்பை தோல்வி: குழந்தைகளுக்கு எச்சரிக்கை விடுத்த சச்சின் மனைவி!

எங்குப் பார்த்தாலும் ரசிகர்கள் போராட்டம் செய்துகொண்டிருந்தார்கள். இந்திய அணி ஆரம்பச் சுற்றிலேயே வெளியேறியதால்...
2007 உலகக்கோப்பை தோல்வி: குழந்தைகளுக்கு எச்சரிக்கை விடுத்த சச்சின் மனைவி!

2007 உலகக்கோப்பை தோல்வியை எந்தவொரு இந்திய ரசிகராலும் மறக்கமுடியாது. 

பெர்முடா அணியை மட்டும் தோற்கடித்த இந்திய அணி, இலங்கை மற்றும் வங்கதேச அணிகளிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபமடைந்து இந்தியா முழுக்க வீரர்களின் வீட்டின் முன்பு கோஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

இந்த காலகட்டம் குறித்து சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தில் சச்சின் மனைவி அஞ்சலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

எங்குப் பார்த்தாலும் ரசிகர்கள் போராட்டம் செய்துகொண்டிருந்தார்கள். இந்திய அணி ஆரம்பச் சுற்றிலேயே வெளியேறியதால் அவர்கள் கோபமாக இருந்தார்கள். உடனே அர்ஜுன், சாரா ஆகிய இருவருக்கும் நான் எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கினேன். பள்ளியில் பல்வேறுவிதமான கருத்துகள், விமரிசனங்களை நீங்கள் கேட்கவேண்டியிருக்கும். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினேன் என்றார்.

'சச்சின்: ஏ பில்லியன் டிரீம்ஸ்' - சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படம். ஜேம்ஸ் ஏர்ஸ்கின் இயக்கியுள்ள இந்தப் படத்தை, 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசை - ஏ.ஆர். ரஹ்மான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. 

சச்சினின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் சச்சின், கங்குலி, வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குறிப்பாக, சிறு வயது சச்சினாக நடித்துள்ளது, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.

சச்சினின் பிறப்பு முதல் இந்தியாவுக்கான அவர் களம் புகுந்த மைதானம், வெற்றி, தோல்வி, காதல், திருமணம் என எல்லாவற்றையும் பிரபதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகப்பட்டுள்ளது. தோனி மற்றும் சேவாக் போன்றோரும் இந்த பயோகிராஃபியில் இடம்பெற்று, சச்சினைப் பற்றி சிலாகித்துள்ளார்கள். கிரிக்கெட்டில் ஜென்டில்மேன் எனவும் மிஸ்டர் கிரிக்கெட் எனவும் போற்றப்படும் சச்சின், சிறுவயதில் குறும்புத்தனத்துக்கு பஞ்சம் வைக்காத பலே கில்லாடி. அந்த சம்பவங்கள் அனைத்தும் மிக யதார்த்தமாக இப்படத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

சச்சின் படம் இந்தியாவில் 2400 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 400 திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com