பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: விளையாட்டுத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: விளையாட்டுத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து இருதரப்பு கிரிக்கெட் வாரியமும் துபையில் இன்று கூடி கலந்தாலோசிக்க உள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து இருதரப்பு கிரிக்கெட் வாரியமும் துபையில் இன்று கூடி கலந்தாலோசிக்க உள்ளன.  

இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: 

பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது. கிரிக்கெட் உறவு வேண்டுமா பயங்கரவாதம் வேண்டுமா என்பதை பாகிஸ்தான் முடிவு செய்யவேண்டும் என்று டெல்லியில் அவர் பேட்டியளித்தார். இதன்மூலம் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. 

கடைசியாக 2012-13ல் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்  மற்றும் டி20 தொடரில் விளையாடின. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் வென்றது. டி20 தொடர் சமநிலையில் முடிவடைந்தது.

ஜூன் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 4 அன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த இரு அணிகளும் சாம்பின்யஸ் டிராபி போட்டியில் மோத உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com