தேசிய கூடைப்பந்துப் போட்டி: கேரள மின் வாரிய அணி வெற்றி

கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டத்தில், ஆடவர் பிரிவில் இந்தியன் ரயில்வே அணியும், மகளிர் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் வெற்றி பெற்றன.
போட்டியின் 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ஆட்டத்தில் மோதிய கேரள மின் வாரிய அணி, குவாஹாட்டி -  வடக்கு எல்லைப்புற (ஃபிராண்டியர்) ரயில்வே அணி வீராங்கனைகள்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் 52-ஆவது ஆடவர் நாச்சிமுத்து கவுண்டர் நினைவுக் கோப்பை, 16-ஆவது மகளிர் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் 26-ஆம் தேதி தொடங்கின. இதில், மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில், இந்தியன் ரயில்வே அணி 71-64 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய கடற்படை அணியையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 89-55 என கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியையும் தோற்கடித்தது.
மற்றொரு ஆட்டத்தில், சென்னை வருமான வரித் துறை அணி 77-61 என்ற கணக்கில் சி.ஆர்.பி.எஃப். அணியை வீழ்த்தியது.
மகளிர் பிரிவு ஆட்டத்தில், கேரள மின் வாரிய அணி 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் குவாஹாட்டி - வடக்கு எல்லைப்புற (ஃபிராண்டியர்) ரயில்வே அணியையும், செகந்திராபாத் - தெற்கு மத்திய ரயில்வே அணி 74-60 என்ற கணக்கில் கோவை மாவட்ட அணியையும் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com