பயிற்சி ஆட்டம் பிசிசிஐ தலைவர் லெவன்-இலங்கை அணிகள் இன்று மோதல்

பிசிசிஐ தலைவர் லெவன்-இலங்கை அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் சனிக்கிழமை தொடங்குகிறது.
பயிற்சி ஆட்டம் பிசிசிஐ தலைவர் லெவன்-இலங்கை அணிகள் இன்று மோதல்

பிசிசிஐ தலைவர் லெவன்-இலங்கை அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் சனிக்கிழமை தொடங்குகிறது.
இதில் பிசிசிஐ தலைவர் லெவன் அணிக்கு சஞ்சு சாம்சன் தலைமை தாங்குகிறார். பலம் வாய்ந்த இந்திய அணியை சந்திப்பதற்கு முன்பான இந்த பயிற்சி ஆட்டம் இலங்கைக்கு பலனளிப்பதாக இருக்கும். இந்த ஆட்டம் நடைபெறவுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாக மைதானம், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கிறது.
இலங்கை அணியை பொருத்த வரையில், காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்காத ஏஞ்ஜெலோ மேத்யூஸ், தற்போது களம் காண்கிறார். அந்தத் தொடரில் மொத்தம் 16 விக்கெட்டுகள் வீழ்த்திய ரங்கனா ஹெராத், இலங்கையின் சுழற்பந்துவீச்சை வழிநடத்துகிறார். லக்ஷன் சண்டகன் உறுதுணையாக இருக்கிறார்.
அணியின் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே, பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார். அவருடன் கேப்டன் சண்டிமல், நிரோஷன் டிக்வெல்லா ஆகியோரும் ரன் குவிப்பில் ஈடுபடுவர்.
பிசிசிஐ தலைவர் லெவன் அணியை பொருத்த வரையில், பஞ்சாப் வீரர் அன்மோல்பிரீத் சிங், ஜீவன்ஜோத் சிங், அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். சந்தீப் வாரியர், அவேஷ் கான் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவர் என நம்பலாம். ஜலஜ் சக்úஸனா ஆல்ரவுண்டர் பிரிவிலும், ஆகாஷ் பந்தாரி, நரேந்திர ஹிர்வானி சுழற்பந்துவீச்சிலும் கலக்க உள்ளனர்.
"பயிற்சி ஆட்டம் அல்ல': இந்த ஆட்டம் குறித்து பிசிசிஐ தலைவர் லெவன் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், "இலங்கைக்கு இது பயிற்சி ஆட்டமாக இருக்கலாம். ஆனால், உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரங்கனா ஹெராத் ஆகியோரைக் கொண்ட இலங்கைக்கு எதிரான இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானதாகும்' என்றார்.
அணிகள் விவரம்
பிசிசிஐ லெவன்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), அபிஷேக் குப்தா, ஆகாஷ் பந்தாரி, அவேஷ் கான், ஜலஜ் சக்úஸனா, ஜீவன்ஜோத் சிங், ரவி கிரன், ரோஹன் பிரேம், சந்தீப், தன்மய் அகர்வால், சந்தீப் வாரியர், அன்மோல்பிரீத் சிங்.
இலங்கை: தினேஷ் சண்டிமல் (கேப்டன்), திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, லாஹிரு திரிமானி (துணை கேப்டன்), நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், லாஹிரு காமேஜ், தனஞ்ஜய டி சில்வா, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், லக்ஷன் சண்டகன், விஷ்வா ஃபெர்னான்டோ, டாசன் சனகா, ரோஷன் சில்வா.
ஆட்ட நேரம்: காலை 9 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com