துளிகள்...

துளிகள்...

துளிகள்...
ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-
மியான்மர் இடையேயான தகுதிச்சுற்று ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் உலகத் தரத்திலான கால்பந்து அகாதெமி தொடங்க உதவத் தயாராக இருப்பதாக பாலிவுட் நடிகரும், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி உரிமையாளருமான ஜான் ஆபிரகாம் அந்த மாநில முதல்வர் சர்வானந்த சோனோவாலிடம் உறுதி அளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரே, இந்திய அணியை சோதித்துப் பார்க்கும் தொடராக இருக்கும் என்று அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன் கூறியுள்ளார்.
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது.
பதக்கம் வெல்லும் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்று பிரிட்டன் தடகள வீரர் மோ ஃபாரா கூறியுள்ளார். இவர், கடந்த ஆகஸ்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மறைந்த ஜக்மோகன் டால்மியாவைப் போல களத்திலும், அதற்கு வெளியிலும் நாயகனைப் போன்றவர் என்று அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறினார்.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில் பெங்களூரு எஃப்சி அணியின் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com