ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் ஜேக் சாக்

லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜேக் சாக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் ஜேக் சாக்

லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜேக் சாக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அவர் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்கர் என்ற பெருமையை ஜேக் சாக் பெற்றுள்ளார்.
முன்னதாக, கடந்த 2007-ஆம் ஆண்டு சீசனில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். வெற்றிக்குப் பிறகு பேசிய ஜேக் சாக் கூறுகையில், 'ஸ்வெரேவுக்கு எதிரான ஆட்டம் கடினமான ஒன்றாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. 3-ஆவது செட்டில் முதலில் சாதாரணமாக ஆடினாலும், பிறகு ஆக்ரோஷமாக ஆடி ஆட்டத்தை கைப்பற்றினேன்' என்றார்.
ஃபெடரர் வெற்றி: இதனிடையே, இந்தப் போட்டியின் ரவுண்ட் ராபின் சுற்று ஒன்றில் குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்ட ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அதில் 6-7(5), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து ஃபெடரர் தனது அடுத்த சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் அல்லது பெல்ஜியத்தின் டேவிட் காஃபினை சந்திக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com