ஐஎஸ்எல்: நார்த்ஈஸ்ட்-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி-ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கோல்கள் இன்றி டிராவில் முடிந்தது.
ஐஎஸ்எல்: நார்த்ஈஸ்ட்-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி-ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கோல்கள் இன்றி டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்கு இடையே அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் சனிக்கிழமை மாலை இந்த ஆட்டம் நடைபெற்றது. இது, இந்த சீசனில் புதிதாக இணைந்துள்ள ஜாம்ஷெட்பூர் அணிக்கு முதல் ஆட்டமாகும். புதிய அணியாக இருந்தபோதிலும், ஏற்கெனவே அனுபவம் வாய்ந்த பலமான அணியான நார்த்ஈஸ்ட்டுக்கு சற்றும் சளைக்காமல் விளையாடியது ஜாம்ஷெட்பூர் அணி.
4-ஆவது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் வீரர் ஜோஸ் கான்கெல்வ்ஸ் அடித்த பந்தை மார்சின்ஹோ கோலாக மாற்ற முயல, அது சிறிய இடைவெளியில் தவறியது. 8-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பும் வீணானது. ஆட்டத்தின் 28-ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூருக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை அந்த அணியின் இஸý அஸýகா கோலாக மாற்றத் தவறினார்.
இந்நிலையில், 29-ஆவது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் வீரர் லால்ரின்டிகா ரால்டேவின் கோல் முயற்சி நூலிழையில் தவறியது. இதனிடையே, விதிகளை மீறி செயல்பட்டதாக ஜாம்ஷெட்பூர் வீரர் எமர்சன் மெüராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 36-ஆவது நிமிடத்தில் சில விநாடிகளுக்கு பந்து தரையில் படாத வகையில் இரு அணி வீரர்களுமே அதை தட்டிச் சென்று கோலடிக்க முற்பட்டனர்.
இந்நிலையில், முதல் பாதி நிறைவடைந்தது. பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் இஸý அஸýகா நீண்ட தூரத்தில் இருந்து அடித்த ஷாட் கோல் கம்பத்துக்கு வெளியே சென்றது. 67-ஆவது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட்டின் கோல் வாய்ப்பை அற்புதமாக தடுத்தார் ஜாம்ஷெட்பூர் கீப்பர் சுப்ரதா பால்.
இந்நிலையில், 78-ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் ஆன்ட்ரே பைக்கிக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். இவ்வாறாக தொடர்ந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்டம் 0-0 என சமனிலையில் முடிந்தது.
இன்றைய ஆட்டம்
சென்னையின் எஃப்சி-எஃப்சி கோவா
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: சென்னை
பெங்களூரு எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி
நேரம்: இரவு 8 மணி
இடம்: பெங்களூரு
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

















 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com