துளிகள்...

இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 900 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் புஜாரா ஆவார். அவர் 9 டெஸ்டுகளில் 3 சதம், 5 அரைசதம் உள்பட மொத்தம் 903 ரன்கள் எடுத்துள்ளார்.

* இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 900 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் புஜாரா ஆவார். அவர் 9 டெஸ்டுகளில் 3 சதம், 5 அரைசதம் உள்பட மொத்தம் 903 ரன்கள் எடுத்துள்ளார்.
 * இந்த ஆட்டத்தின் மூலம் இலங்கை வீரர் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் டெஸ்ட் போட்டியில் தனது 28-ஆவது அரைசதத்தை எட்டினார். இது, இந்தியாவுக்கு எதிரான அவரது 4-ஆவது அரைசதமாகும்.
 * சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் இந்தியா 200 ரன்களுக்கும் குறைவாக எடுப்பது (172) இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, 2005 டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் இந்தியா 167 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.
 * புஜாரா குறைந்தபட்சம் 50 அல்லது அதற்கு கூடுதலான ரன்களை எடுக்கும் 13-ஆவது டெஸ்ட் இதுவாகும். இது, 2016-17 சீசனில் இதுவரையிலான 17 டெஸ்ட் போட்டிகளில் கணக்கிடப்பட்டுள்ளது.
 * தென் ஆப்பிரிக்காவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் "என்டபிள்யூயு புக்கே' அணி வீரர் ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் ஆட்டத்தில் 490 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். இவர் 151 பந்துகளில் 27 பவுண்டரிகள், 57 சிக்ஸர்களுடன் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com