பயிற்சியாளர் இவானை பிரிந்தார் முர்ரே

பிரிட்டன் டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே, தனது பயிற்சியாளர் இவான் லென்டலை பிரிவதாக அறிவித்துள்ளார்.

பிரிட்டன் டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே, தனது பயிற்சியாளர் இவான் லென்டலை பிரிவதாக அறிவித்துள்ளார்.
 இவானின் பயிற்சியின் கீழ் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 2 ஒலிம்பிக் தங்கங்கள் வென்றதுடன் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை எட்டிய முர்ரே, அவரை பிரிவது இது 2-ஆவது முறையாகும்.
 இதுதொடர்பாக முர்ரே தனது இணையதளத்தில் கூறியுள்ளதாவது:
 நானும்-இவானும் எங்களிடையேயான ஒத்துழைப்பை நிறைவு செய்துகொள்வதென பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். கடந்த ஆண்டுகளில் இவான் எனக்கு வழிகாட்டியதற்காகவும், உதவியதற்காகவும் அவருக்கு எனது நன்றிகள். எங்களது ஒத்துழைப்பு வெற்றிகரமாக இருந்ததுடன், இருவரம் பரஸ்பரம் அதிகம் கற்றுக் கொண்டோம்.
 தற்போது, ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து தொடங்கும் 2018-ஆம் ஆண்டு சீசனில் கவனம் செலுத்தியுள்ளேன். எனது அணியுடன் இணைந்து அதற்காக முழுமையாகத் தயாராகி வருகிறேன் என்று முர்ரே கூறியுள்ளார்.
 காயம் காரணமாக நடப்பு சீசனின் பல்வேறு போட்டிகளில் பங்கேற்காமல் போன உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான முர்ரே, தற்போது ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் 16-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் தற்போது தனது உடற்தகுதியை மேம்படுத்த மியாமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com