டெஸ்ட் தொடர்: புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு!

டெஸ்ட் தொடர்: புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு!

இலங்கைக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கு வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கு வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார்.

திருமணம் நடைபெறவுள்ளதால் கடைசி இரு டெஸ்டுகளிலிருந்து புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். அதேபோல தனிப்பட்டக் காரணங்களுக்காக 2-வது டெஸ்டில் இருந்து மட்டும் ஷிகர் தவன் விலகியுள்ளார். 3-வது டெஸ்டின்போது தவன் இந்திய அணியுடன் இணைந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெஸ்ட் தொடரின் கடைசி இரு டெஸ்டுகளுக்கு புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாட்டு ஒருநாள் அணியின் கேப்டனாக உள்ள விஜய் சங்கர், 32 முதல்தரப் போட்டிகளில் 1671 ரன்களும் 27 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சமீபகாலமாக இந்திய ஏ அணியில் இடம்பெற்ற விஜய் சங்கர், தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

ஷிகர் தவனுக்குப் பதிலாக மற்றொரு தமிழக வீரர் அபினவ் முகுந்த் தேர்வாகியிருப்பார். ஆனால் தவன் மூன்றாவது டெஸ்டில் மீண்டும் விளையாட வருவதாகக் கூறியுள்ளதால் ஒரு டெஸ்டுக்கு மட்டும் மாற்று வீரர் தேவையில்லை என்று பிசிசிஐ கருதியுள்ளது. மேலும் ரஞ்சி போட்டிகள் நடைபெறுவதாலும் முகுந்தைத் தேர்வு செய்யவில்லை. இதையடுத்து வெள்ளி முதல் நாகபுரியில் தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்டில் தவனுக்குப் பதிலாக முரளி விஜய் களமிறங்கவுள்ளார். புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக ரஞ்சி போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வரும் இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com