ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 4-ஆவது இடத்துக்கு புஜாரா முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 5-ஆவது இடத்திலும், புஜாரா 4-ஆவது இடத்துக்கும் முன்னேறினர். 
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 4-ஆவது இடத்துக்கு புஜாரா முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 5-ஆவது இடத்திலும், புஜாரா 4-ஆவது இடத்துக்கும் முன்னேறினர். 
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அண்மையில் நடந்துமுடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் கோலி 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இது, சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்த 50-ஆவது சதமாகும். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 5 நாள்களும் பேட் செய்து புஜாரா சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 28-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
பந்து வீச்சில் ஜடேஜா 3-ஆவது இடம்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய அணியின் பந்துவீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான ரவீந்தர் ஜடேஜா 3-ஆவது இடத்துக்கு சரிந்தார். அதேநேரம், ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இவர், 2-ஆவது இடம் வகிக்கிறார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 29-ஆவது இடத்துக்கும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 18-ஆவது இடத்துக்கும் முன்னேறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com