இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 266/4

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 112.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 112.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத இலங்கை 2-ஆவது நாளில் 154.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 419 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சண்டிமல் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ், யாசிர் ஷா அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய பாகிஸ்தான் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், 3-ஆவது நாளை (சனிக்கிழமை) ஷான் மசூத் 30, சமி அஸ்லாம் 31 ரன்களுடன் தொடங்கினர். இதில் சமி அஸ்லாம் 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். மறுமுனையில் ஷான் மசூத் 59 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து வந்த ஆஸாத் ஷஃபிக் 4 பவுண்டரிகள் உள்பட 39 ரன்களுடனும், பாபர் ஆஸம் 2 பவுண்டரிகள் உள்பட 28 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இதற்குள்ளாக 3-ஆவது நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வர, 112.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான். அஸார் அலி 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 2 விக்கெட்டுகளும், தில்ருவன் பெரேரா, நுவன் பிரதீப் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com