துளிகள்...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 2-ஆவது இன்னிங்ஸில் 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 2-ஆவது இன்னிங்ஸில் 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 375 ரன்கள் எடுக்க வேண்டியுள்ள நிலையில், கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.

இந்தியாவில் இம்மாதம் தொடங்கவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெண் உதவி நடுவர்கள் பணியாற்ற உள்ளனர். ஃபிஃபா ஆடவர் போட்டியில் பெண் நடுவர் ஈடுபடுத்தப்படுவது இது முதல் முறையாகும்.

நியூஸிலாந்து "ஏ' அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய "ஏ' அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 82 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய "ஏ' அணி தற்போது 149 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் குடும்பத்தினர், போட்டியை காண்பதற்காக தில்லி வருவதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் இரு துணைக் குழுக்களின் தலைவராக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத் தலைவர் பீரேந்திர பிரசாத் பாய்ஷியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஃபிஃபா யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சிலி நாட்டு அணி, ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வந்தடைந்தது. அந்த அணி வரும் 8-ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com