ஆஸ்திரேலிய வீரர்கள் பஸ் மீது கல்வீச்சு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ஆஸ்திரேலிய வீரர்கள் பஸ் மீது கல்வீச்சு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டி20 ஆட்டம் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்டம் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. எனினும் அந்த இடத்தில் வீரர்கள் யாரும் அமராததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம், அஸ்ஸாம் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது. 
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவால், இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது: குவாஹாட்டி சிறந்த விளையாட்டு நகராக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அதன் புகழை அழிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியினர் சென்ற பஸ் மீது கல் வீசப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற செயல்களை அஸ்ஸாம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். தவறிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். 
அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க செயலர் பிரதீப் புர்ராகோஹைன் கூறுகையில், 'நாங்கள் எப்போதுமே உயர்மட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறோம். அதையும் தாண்டி இந்த சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை. கல் வீச்சு சம்பவம், வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே நடந்திருக்கிறது. இது நெரிசலான சாலையும் கிடையாது. கல்வீச்சு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கிறேன்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com